search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எடப்பாடி பழனிசாமி கடிதம்"

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #CentralRailwayStation #MGR #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், இதற்காக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வது என்றும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோல் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார்.



    அதில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என  பெயர் சூட்டப்பட வேண்டும்  என்றும், இதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதேபோல் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். #CentralRailwayStation #MGR #EdappadiPalaniswami

    மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சி தொடர்பாக பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதி உள்ளார். #MekedatuDam #TNCM
    சென்னை:

    பெங்களூர் மக்களின் குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணை கட்டினால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும்  நீரின் அளவு குறையும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.

    இந்த எதிர்ப்புக்கு மத்தியில் மேகதாது அணை தொடர்பான செயல்திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இந்த திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்படி தமிழகம் மற்றும் கேரள அரசுகளை மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.



    இதையடுத்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகம் பெறவில்லை என்றும், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மேகதாதுவில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

    கர்நாடக அரசின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே, மேகதாது விஷயத்தில் கர்நாடகாவின் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க கூடாது என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். #MekedatuDam #TNCM
    ×